17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்றவர்கள் கைது.

கஞ்சா விற்றவர்கள் கைது.

எழுதியவர்: mohan December 23, 2019, 11:18 am

மதுரை மாவட்டம் .திருமங்கலம் டவுன் போலீசார், கீழஉரப்பனூர் அருகே இந்திரா காலனியில் ரோந்து சென்றபோது அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த, அதே ஊரைச் சேர்ந்த முருகன் (40 ) என்பவரை போலீசார் விசாரணை செய்த போது,அவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. மேற்படி நபரிடமிருந்து கஞ்சா சுமார் 1 கிலோ 100 கிராம் பறிமுதல் செய்தும், மேற்படி நபரிடம் கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த பணம். ரூ- 47000/- ஆயிரத்தை, போலீசார் பறிமுதல் செய்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

செக்கானூரணி போலீஸார் கருமாத்தூர், காரம்பட்டி ரயில்வே பிரிவு அருகே, ரோந்து சென்றபோது, அங்கே விஜய் (21) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரை, சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் கஞ்சா சுமார் 1 கிலோ 100 கிராம் மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ- 1510 ஐ பரிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!