இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் 17 வார்டுகள் உள்ளன. இவற்றில் போட்டியிட 146 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 144 மனுக்கள் ஏற்கப்பட்டு 49 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. தற்போது 95 பேர் களத்தில் உள்ளனர். இதில் 17 வார்டில் (மண்டபம் மேற்கு ) மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவரும், ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான ஆ.ரவிச்சந்திர ராமவன்னி திமுக., சார்பில் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீனவ பெண் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார்.
மாவட்ட கவுன்சில் வார்டு தேர்தல் திமுக., நிர்வாகி வாக்கு சேகரிப்பு
எழுதியவர்: mohan December 23, 2019, 10:25 am




You must be logged in to post a comment.