18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி இராமநாதபுரத்தில் உலமாக்கள் சபை கண்டன பொதுக்கூட்டம்..

தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி இராமநாதபுரத்தில் உலமாக்கள் சபை கண்டன பொதுக்கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் December 23, 2019, 1:35 am

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. ஜமாத்துல் உலமா சபை இமாம் அஹமது இப்ராஹீம் தலைமை வகித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுரவ ஆலோசகரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது,  நாகர்கோவில் கலாசார பள்ளிவாசல் தலைமை இமாம் எம்.ஏ.ஷவ்கத் அலி உஸ்மானி, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா  தேசிய செயற்குழு உறுப்பினர் யூசுப், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா  மாநிலச் செயலாளர்  அப்பாஸ், தமுமுக ஹைதர் அலி, முன்னாள் எம்எல்ஏ அசன் அலி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கலையரசன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அறிவழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முகமது யாசீன், தமிழ் புலிகள் மாநில அமைப்பாளர் முகிலரசன் உள்ளிட்டோர் பேசினர். ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த உலமாக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!