18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புகை நமக்கு பகை. மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்களா

புகை நமக்கு பகை. மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்களா

எழுதியவர்: mohan December 22, 2019, 1:17 pm

மதுரை பைபாஸ் சாலை ஸ்டேட் பாங்க் காலனி உள்ள பகுதியில் பொதுமக்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் மற்றும் வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை தொடர்ந்து எடுத்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளார்கள். அப்பகுதி மக்கள் கூறுகையில் பல முறை நாங்கள் கூறியும் இவர்கள் தொடர்ந்து இதுபோன்று குப்பைகளை எரிப்பதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் மூச்சு விட மிகவும் சிரமப்படுகிறார்கள் .மேலும் சாலையில் நடந்து செல்லும் பொழுது முக கவசம் அணிந்து செல்ல வேண்டிய நிலையும் உள்ளது .  மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் இதே போன்ற குப்பைகளை எரித்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே காற்றின் மாசு மிகவும் மோசமாக உள்ள நிலையில் இது போன்ற குப்பை எரிப்பதனால் மேலும் காற்று மாசு ஏற்படும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குப்பைகளை தீவைத்த ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேலும் குப்பைகளை அழிக்காமல் பார்க்க வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுக்கின்றனர். புகை நமக்கு பகை என்பதை மறந்துவிட்டு அதிகாரிகள் இனியாவது திருந்துவார்களா என கேள்வி எழுப்புகின்றனர்

செய்தியாளர் விகாளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!