18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆபத்தான நிலையில் அறுந்து கிடக்கும் மின் கம்பி-விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

ஆபத்தான நிலையில் அறுந்து கிடக்கும் மின் கம்பி-விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan December 22, 2019, 1:00 pm

பெரம்பலூர் மாவட்டம் பெரிய வெண்மணி கிராமத்தில் நடுத்தெருவில் ஒரு வாரத்துக்கு மேல் மின்சார வாரிய இணைப்பு கம்பி அறுந்து ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் தரையில் கிடந்து வருகிறது.இது தொடர்பாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் துறையிடம் புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட நிர்வாகமும்,சம்பந்தப்பட்ட மின் வாரிய துறையும் உயிர் சேதங்கள் ஏற்படும் முன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!