திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14வது வார்டு கவுன்சிலராக அ. தி. மு. க ஒன்றிய செயலாளர் யாகப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி தலைமை தாங்கி தேர்வுசெய்யப்பட்ட மைக்கான சான்றிதழ்களை வழங்கினார். அப்போது உடன் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் உட்பட பலர் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குல்லிசெட்டிபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வைகை பாலனுக்கும், வீலி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றக் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வீரசின்னுக்கும், மட்டப் பாறை ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மகேந்திரனுக்கும் தலைவராக தேர்வு செய்யப்பட்டமைக்கான சான்றினை நிலக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் லாரன்ஸ் வழங்கினார்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.