மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழகுயில்குடி பகுதியில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கிளை கல்லூரி அமைந்துள்ளது.இங்கு தூத்துக்குடியில் உள்ள ஆறுமுகநேரி என்ற பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் பொன்ராஜ் (21) என்ற மாணவன் MBA இரண்டாமாண்டு கல்லூரியில் உள்ள படித்து வருகிறார் இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.நாளை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளித்து இருந்த நிலையில் அனைத்து மாணவர்களும் விடுதியில் இருந்து ஊருக்கு சென்றுள்ளனர்.அனைத்து மாணவர்களும் மதியம் விடுதியை விட்டு சொந்த ஊருக்கு செல்வதாக கூறி இருந்த பொன்ராஜ் திடீரென்று தன் கையை பிளேடால் கிழித்து தற்கொலை செய்து கொண்டார்.எதற்காக மாணவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் தற்போது வரை தெரியவில்லை.
நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் எதற்காக மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என்ற முதற் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் காவல்துறையினர்.ஏற்கனவே ஐஐடி மாணவி தற்கொலை தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள தற்கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தந்தை இன்று காலை கோவையில் தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மருத்துவமனையில் இறந்து விட்ட தகவல் மாணவனுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து மாணவன் மனவேதனையில் இருந்து பிளேடால் கையை அறுத்தும், கழுத்தை அறுத்தும் தற்கொலைக்கு முயன்று இறுதியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.