18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே வலையில் சிக்கிய மான் பத்திரமாக மீட்பு

இராமநாதபுரம் அருகே வலையில் சிக்கிய மான் பத்திரமாக மீட்பு

எழுதியவர்: mohan December 22, 2019, 11:52 am

இராமநாதபுரம் அருகே சித்தூர் வாடி வெட்டுக்குளம் கிராமத்தில் தண்ணீர் பருக கண்மாய் தேடி வந்த ஆண் மான், ஆடுகள் வராமலிருக்க வயலைச் சுற்றி வைத்திருந்த வலையில் கொம்பு சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரகர் சு. சதீஷ் , வனவர் சந்துரு ராஜா, வனக்காப்பாளர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர்கள் சரவணன், வெற்றி ஆகியோர் மானின் கொம்பை பாதுகாப்பாக எடுத்து மானை மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். மான்கள் தண்ணீர் தேடி வரும்போது ஊர் பகுதியிலுள்ள நாய்களால் கடி படுவதுண்டு. பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். வன உயிரினங்களை பற்றி மக்களுக்கு ஏற்பட்டுள்ள நல்ல விழிப்புணர்வை இச்செயல் பிரதிபலிக்கிறது. இதே போன்று வரும் காலங்களிலும் வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை யோடு மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உரிய நேரத்தில் மீட்டு மானை மீண்டும் துள்ள விட்ட வனசரக பணியாளர்களை வனச்சரக உயிரின காப்பாளார்  அசோக் குமார் பாராட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!