18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்த விளக்கக் கூட்டம்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்த விளக்கக் கூட்டம்.

எழுதியவர்: mohan December 22, 2019, 10:53 am

இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதற்கான விளக்க பொதுக்கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் , பாரதிய ஜனதா கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவர் துரை. சேனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் . அவர்கள் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த பல்வேறு விளக்கங்களை அளித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய BJP கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவர் துரை. சேனாதிபதி, பாரத பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் இப் பிரச்சினையை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!