திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் மக்கள் பேரணி.!
மத்திய அரசாங்கத்தால் அமுல் படுத்தப் பட்டுள்ள குடியுறிமை சட்ட திருத்த மசோதாவுற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் 20/12/19 வெள்ளிக்கிழமை மதியம் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து முத்தவல்லி உதுமான் அலி தலைமையில் ரஷூல் மைதீன், ஷேக்தாவூத் திமுக மாவட்ட சிறுபான்மை மக்கள் நல துணை அமைப்பாளர் மரைக்காயர் மற்றும் சுமார் 400- க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். ஊர்வலம் கடைவீதி வந்தடைந்தவுடன் அங்கு ஒட்டன்சத்திரம் துணை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து சித்தையன்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுமார் மூன்று மணிநேரம் வைத்திருந்து பிறகு அனைவரையும் விடுதலை செய்தனர்.




You must be logged in to post a comment.