கீழக்கரையில் வரும் 23ம் தேதி மாலை 04.00 மணியளவில் ஜும்ஆ பள்ளிவாசல் எதிர்புறம் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கீழக்கரையில் உள்ள அனைத்து மக்களும் இணைந்து கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கீழக்கரையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் வருங்கால சந்ததியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.