17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு அரசு வருவாய் கிராம ஊழியர் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு வருவாய் கிராம ஊழியர் சங்கக் கூட்டம்

எழுதியவர்: mohan December 21, 2019, 2:20 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத் தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில பொருளாளர் மகேந்திரன் மாவட்ட பொருளாளர் ரகுநாதன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். வட்ட துணைத் தலைவர் பிரான்சிஸ் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும், அனைவரும் பழைய முறையான ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனவும், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வில் 20 சதவீத விழுக்காடு என்பதை 30 சதவீத விழுக்காடாக உயர்த்த வேண்டும் எனவும், ஜமாபந்தி சிறப்புப் படி வழங்க வேண்டுமெனவும், இயற்கை இடர் பாட்டிற்கான படி வழங்க வேண்டும் கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 10 ஆண்டுகள் என உள்ளதை 6 ஆண்டுகளாக குறைத்து பதவி உயர்வு வழங்க வேண்டுமெனவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் வட்ட துணைத்தலைவர் நாகஜோதி , வட்ட செயலாளர் விஜயராஜ், இணைச் செயலாளர்கள் பெனாசிர் பாத்திமா, கணேசன், வட்ட பொருளாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைப்பாண்டி, பாண்டியராஜன் , உள்பட பலர் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!