நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மின்கசிவு ஏற்படுகிறது.இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பழக்கடைகளில் திடீர் மின் கசிவு ஏற்பட்டது. சுரண்டை அண்ணா சிலை அருகே பரமசிவ பாண்டியன் த/ பெ. ஆறுமுகபாண்டியன் பழக்கடை நடத்தி வருகிறார்.
அதிகாலை மின்கசிவு காரணமாக கடை முற்றிலும் தீ எரிந்து நாசமானது. தகவலறிந்த சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் பாலசந்தர் ,ரவீந்திரன் திலகர்,பொன்ராஜ்,வெள்ளபாண்டியன் ஆகியோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் வீரகேரளம்புதூர் வட்டம், சுரண்டை குறுவட்டம், சுரண்டை – 1 கிராமம், சுரண்டை சங்கரன் கோவில் மெயின் ரோடு,அண்ணா சிலைக்கு பின்புறம், கதவிலக்கம் ; 14/1- எண்ணிட்ட திரு.முருகன் (டெய்லர்) என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்திற்கு வாடகை கொடுத்து பகுதியைச் சார்ந்த பரமசிவதேவர் என்பவர் வைத்துள்ள பழக்கடையில் இன்று (21.12.2019) அதிகாலை 5.00 மணிக்கு மின் கசிவின் காரணமாக தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் சுரண்டை தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறையினரால் பழக்கடையில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இச்சம்பவங்களினால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீ பரவ விடாமல் உரிய நேரத்தில் விரைந்து வந்து தீயை அணைத்த சுரண்டை தீயணைப்பு நிலைய அதிகாரிகள்,வீரர்களின் சேவை பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.