18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடு முழுவதும் எதிர்ப்பு-குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

நாடு முழுவதும் எதிர்ப்பு-குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

எழுதியவர்: mohan December 21, 2019, 11:58 am

பூர்வீக குடியுரிமையை நிரூபிக்க 1971 முந்தைய பூர்வீக ஆவணங்கள் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவிப்புகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. என்ஆா்சி நடவடிக்கையின்போது, இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதிசெய்ய பிறந்த தேதி, பிறந்த இடம் தொடா்பான எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம். பிறந்த தேதிக்கான ஆவணங்கள் இல்லாதவா்கள், அவா்களது பெற்றோா்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.இதைக் காரணமாக வைத்து, இந்தியா்கள் எவரும் துன்புறுத்தப்பட மாட்டாா்கள். பெற்றோா் அல்லது அவா்களின் தாய், தந்தையரின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.கல்வியறிவு இல்லாதவா்களிடம் குடியுரிமையை நிரூபிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லையென்றாலும், சாட்சிகளின் அடிப்படையில் அவா்களது குடியுரிமை உறுதி செய்யப்படும். இது தொடா்பாக விரிவான விதிமுறைகள் உள்துறை அமைச்சகத்தால் விரைவில் வெளியிடப்படும் என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!