18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா

நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா

எழுதியவர்: mohan December 21, 2019, 11:45 am

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர். A.R.பொன்பெரியசாமி தலைமை ஏற்று வரவேற்புரை வழங்கினார். விழாவின் சிறப்புகளை கல்லூரிக்குழுத்தலைவர் Er. பொன். பாலசுப்ரமணியன் எடுத்துரைத்தார். விளையாட்டு  நல அலுவலர்  மு.பிரபு விழா பேருரை ஆற்றினார். அவர் உரையில் “ அரசு விளையாட்டு மாணவர்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது அதைப் பயன்படுத்தி வாழ்க்;கையில் முன்னேற வேண்டும் என்றார். அவர் வாழ்க்கை சிறக்க விளையாட்டு ஒன்றே காரணம”; என்று தனது சிறப்புரையை வழங்கினார். மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுப்பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

உடற்கல்வி இயக்குநர் முனைவர்.  சகாயலதாராணி ஆண்டறிக்கை வாசித்தாhர். விழாவின் இறுதியில் முனைவர் விஜிசாரல் எலிசபெத் நன்றி கூறினார். உடற்கல்வி உதவி இயக்குநர்  செந்தில்குமார் விழாவினை ஒருங்கிணைத்தார். விசாலாட்சி மற்றும் .கல்பனா விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இயற்பியல் துறை ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!