நெல்லையை சேர்ந்த பிரபல தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜ் காலமானார். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் மூத்த தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜ். 81 வயதாகிய
அவர் திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை காலமானார்.திருநெல்வேலியை சேர்ந்தவரான டி.செல்வராஜ் வழக்கறிஞராக பணியாற்றியவர். உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் அவர் பணிபுரிந்தார். டி.செல்வராஜ் எழுதிய தேநீர் என்ற நாவல் இயக்குனர் ஜெயபாரதி மற்றும் கே.பாக்யராஜால் ஊமை ஜனங்கள் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.தோல் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் விருதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து பெற்ற டி.செல்வராஜ், மூலதனம், மலரும் சருகும், அக்னி குண்டம் போன்ற சிறந்த நாவல்களையும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாடகங்களையும் எழுதியுள்ளார். பன்முகத்தன்மை கொண்ட மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.