17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்கள் கைது.

இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்கள் கைது.

எழுதியவர்: mohan December 21, 2019, 11:18 am

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி ரோஜா தெரு, முல்லைநகர் அருகே அரவிந்தன் (35) தனது இருசக்கர வாகனத்தை, இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு காலையில் பார்த்த பொழுது, தனது இருசக்கர வாகனம் காணவில்லை என ஆஸ்டின்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்ததில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஷேக்முகமது (27) யாசீர் (23) என்பவர்கள் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேற்படி நபர்களை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!