17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் 6,048 பேர் போட்டி

இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் 6,048 பேர் போட்டி

எழுதியவர்: mohan December 21, 2019, 10:55 am

இராமநாதபுரம் மாவட்ட ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 3,691 பதவிகளுக்கு 6,048 பேர் போட்டியிடுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 429 ஊராட்சிகள், 3,075 கிராம ஊராட்சி வார்டுகள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. இப்பதவிகளில் போட்டியிட 9,898 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையில் 109 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 3,075 கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,875 பேர் களத்தில் உள்ளனர். 1,494 பேர் கிராம வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.429 ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,241 பேர் களத்தில் உள்ளனர். 50 போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 837 பேர் களத்தில் உள்ளனர். ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 95 பேர் களத்தில் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!