இந்திய ரயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ரமேஷ் சந்திரா ரத்தன் தலைமையில் உறுப்பினர்கள் வெங்கட்ரமணி, சுந்தர்,
பஞ்சனன் ரவுட் ஆகியோர் மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். பயணச்சீட்டு முன் பதிவு அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, உணவு விடுதிகள் இருந்த பயணிகளிடம் ரயில் நிலைய பயணிகள் வசதிகள் பற்றி கேட்டறிந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகள், நிலைய தூய்மை, சுகாதாரம், உணவு விடுதிகள், அவசர கால மருத்துவ உதவி மையம், குடிநீர் விற்பனை இயந்திரம், குடிநீர் குப்பிகள் உடைக்கும் இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டனர். நடைமேடை, நிலைய உள் வளாகம், கூடுதல் மின்விசிறிகள், விளக்குகள், இருக்கைகள் அமைக்குமாறு அறிவுறுத்தினர். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித்குமார் மன்சுகானி, முதுநிலை வர்த்தக மேலாளர் பிரசன்னா, மக்கள் தொடர்பு அதிகாரி வீராசாமி உடனிருந்தனர்.
மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் சேவை குழு ஆய்வு
எழுதியவர்: mohan December 21, 2019, 10:35 am




You must be logged in to post a comment.