மதுரை மாவட்டத்தில் சமீப காலத்தில் ஷேர் ஆட்டோக்களால் உயிரிழப்புகள் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து அதிக அளவு ஆட்களை ஏற்றி செல்லும் ஷேர் ஆட்டோக்களை உரிய அனுமதி இல்லாமல் ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து அதோடு 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இவர்கள் அட்டகாசங்கள் ஆரம்பித்துவிட்டது .அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வது பள்ளி மாணவர்களை அதிக அளவில் முன்னிலையில் உட்காரவைத்து செல்வதும் மேலும் நினைத்த இடத்தில் வாகனத்தை நிறுத்துவதும் மதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோக்களின் பின்னால் நின்று தொங்கிக்கொண்டு செல்லும் நிலை கூட நீடிக்கிறது. மதுரை நகர் பகுதிகளில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் சென்று விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் .மேலும் ஷேர் ஆட்டோக்கள் தான் அதிக அளவுகள் விபத்து ஏற்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.