ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருசலில் சிக்கித் தவிக்கும் நிலக்கோட்டை 4-ரோடு பகுதி.!
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மையானது, இங்குதான் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள், ஒன்றிய அலுவலகம், வேலாண்மை அலுவலகம்,பூ – மார்கெட் என எண்ணற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்லும் நிலை உள்ளதால்,
ஆக்கிரமிப்புகள் நிறைந்த 4- ரோடு பகுதியில் காலை மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
மேலும் நிலக்கோட்டை இருந்து அணைப்பட்டி, விளாம்பட்டி, வழியாக சோழவந்தான் வரை செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் சந்தைக்கு செல்லும் வழி மற்றும் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் இருபுறங்களிலும் வணிக நிறுவனங்கள் மற்றும் தற்காலிக கடைகள் என சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாலும் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் கண்ட இடங்களில் தாறுமாறாக நிறுத்துவதால் காலை மாலை மட்டும் அல்லாமல் எந்நேரமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனை நெடுஞ்சாலைத்துறை யோ காவல்துறையோ பேரூராட்சி நிர்வாகமோ யாரும் கண்டுகொள்ளாததால் எந்நேரமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகிறார்கள்.நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.