18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காரைக்காலில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு.

காரைக்காலில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு.

எழுதியவர்: mohan December 20, 2019, 1:49 pm

காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து கடத்துவதற்காக மினி லாரியில் மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட துணை ஆட்சியருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியரக தாசில்தார் சரவணன், திருநள்ளாறு தாசில்தார் பொய்யாத மூர்த்தி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன் உள்ளிட்டோர் போலீஸாருடன் அங்கு சென்று பார்த்த போது ஒரு மினி லாரி முழுவதும் மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மினி லாரி மற்றும் அதிலிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அருகிலிருந்த வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டினுள் அட்டை பெட்டிகள் அதிகளவில் இருப்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் மதுபான பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு போலீஸாரும் ,அதிகாரிகளும் அர்ச்சியடைந்தனர். சுமார் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான மதுபாட்டில்கள் , அட்டைப் பெட்டிகளுடன் வீடு முழுவதும் நிறைந்திருந்தன.

வீட்டினுள் இருந்த அறைகளில் சென்று பார்த்த போது மது பாட்டில்களின் மூடிகள், பாட்டில்கள், கலர் ஏற்றுவதற்கான பௌடர் மற்றும் ஸ்டிக்கர்கள் கண்டிபிடிக்கப்பட்டன. இதனால் அங்கு போலி மதுபான தொழிற்சாலை இருந்து வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த இடம் முடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. யாருக்கு சொந்தமான இடம்? யார் இதை செய்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரைக்காலை ஒட்டியுள்ள நாகையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக கொண்டு செல்ல இந்த மதுபானங்கள் இருந்ததா? என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடைகளில் வைத்து விற்பனை செய்வதற்காக இவை இருந்ததா? என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீட்டில் BJP கொடி இருந்ததால் அரசியல் பிரமுகர்கள் இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீஸார் , தலைமறைவாகியுள்ள சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!