17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் தங்கள் கிராமத்திற்கும் கால்வாய் தண்ணீர்கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்.

உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் தங்கள் கிராமத்திற்கும் கால்வாய் தண்ணீர்கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்.

எழுதியவர்: mohan December 20, 2019, 11:15 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த வைகை தண்ணீர் 15கிலோமீட்டர் கடந்து உசிலம்பட்டி கண்மாய்க்கு வந்தடைந்து கண்மாய் நிரம்பும் பட்சத்தில் உள்ள நிலையில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் உசிலம்பட்டி அருகே மாதரையைக் கடந்து நக்கலப்பட்டி கிராமத்திற்கு செல்லும்.58 கால்வாய் நீர் செல்லும் கண்மாய்கள் பட்டியலில் மாதரை கண்மாய் இல்லை.

இந்நிலையில் நக்கலப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் போது கால்வாயை சேதப்படுத்தி மாதரை கண்மாய்க்கு கொண்டுசெல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாதரை கண்மாய்க்கு தண்ணீர் அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்ததுடன் கால்வாய் உடைப்பை சரி செய்தனர்.தற்போது மாதரை கிராமத்தில் உள்ள கண்மாயிலும் 58கால்வாய் தண்ணீர் நிரப்பவேண்டும் என மாதரை கிராமமக்கள் 200க்கும் மேற்பட்டோர் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் பேச்சுவார்தையில் ஈடுபட்டு தமிழக அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!