17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடியில், (விஜய் திவஸ்)கார்கில் வெற்றி தின வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.!

தூத்துக்குடியில், (விஜய் திவஸ்)கார்கில் வெற்றி தின வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.!

எழுதியவர்: Askar December 19, 2019, 11:29 pm

தூத்துக்குடியில், (விஜய் திவஸ்) கார்கில் வெற்றி தின வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.!

காமராஜ் கல்வியியல் கல்லூரி நாட்டுநலப்பணிகள் திட்டம், சுரபி அறக்கட்டளை, VETERANS INDIA (Tamilnadu) இணைந்து நடத்திய, கார்கில் கதாநாயகர்களுக்கு வீரவணக்க அஞ்சலி தினம்.

தேசத்திற்கு பெருமை தேடி தந்த நமது இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூறி, அஞ்சலி செலுத்தி அனுசரிக்கப்பட்டது.

19.12.2019 அன்று மதியம் 2.00 மணியளவில் காமராஜ் கல்லூரி சுயநிதிப் பிரிவு பொன்விழா கட்டிடத்தில் (Golden Jubilee Hall) நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் Col. M. சுந்தரம்,(மாவட்ட உப தலைவர் , முப்படைவாரியம்,) தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது, தேசத்தின் எல்லையில் வீரன் தூங்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி பாதுகாப்பு தருவதால் தான் நாம் இங்கு நிம்மதியாக பயமின்றி வாழ்கிறோம் என்றும்,தனது நீண்ட நெடிய போர்க்கள அனுபவங்களையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திரு. மூர்த்தி ஆனந்தன் (முன்னாள் கடற்படைப் பொறியாளர்,) பேசும்போது, தேசத்தைக் காப்பது இனி இளைஞர்களான உங்களின் கையில் எனவே மாணவர்கள் தேச சேவைக்கு முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சுரபி அறக்கட்டளையின் சார்பில் 1999 ஆப்பரேஷன் விஜய் போரில் தன் இன்னுயிரை நீத்த காவல் தெய்வம் அருணாசலம் அவர்களின் தாயார், திருமதி. ஆறுமுகத்தம்மாள், போரில் கன்னிவெடித்தாக்குதலில் கால் இழந்த வீரர் திரு. முனியசாமி மற்றும் காலில் குண்டு பாய்ந்து பாதிப்புக்குள்ளான வீரர் திரு. சுப்பிரமணியன் ஆகியோருக்கு பொன்னாடையும் பணமுடிப்பும் தந்து கௌரவித்தார்.

விழாவில் Dr.டோனி மெல்வின், (Director Of Self Financing, Kamaraj College. Tuticorin.)

BLOOD ஜெயபால், (சமூக ஆர்வலர்,)

பேராசிரியர்கள் திருமதி. மேரி ஜோஸ்பின் ஜெரினா, திருமதி. A. செல்வ ராஜ புஸ்பா, திரு. V. கோபாலகிருஷ்ணன், மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, இந்தியநாடு தனது ஆயுத பலத்தையும், அமைதியை விரும்பும் நிலைபாட்டையும் உலகுக்கு காட்டிய கார்கில் போரின் வெற்றி தினத்தை கொண்டாடும் விதமாக அமர் ஜவான் மலராஞ்சலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி மௌனாஞ்சலியும் செலுத்தினர்.

இறுதியில் சுரபி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி. ஹேமா முரளிதரன் நன்றியுரை ஆற்றினார்.

ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்துடன் விழா நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!