உசிலம்பட்டி ஊராட்சி 12வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு சின்னம் ஒதுக்குவதில் குளறுபடி ஏற்ப்பட்டதால் அமமுக கட்சியினர் தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.இதில் 12வது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அமமுக சார்பில் வீரபிரபாகரன் போட்டியிடுகிறார். சுயேட்சையான இவருக்கு காலையில் பேருந்து சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.மாலையில் கைக்கடிகாரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.இதனால் ஆவேசமடைந்த அமமுகவினர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டனர். சம்பவமறிந்த தேர்தல் அதிகாரி சௌந்தர்யா அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.இதன்பின் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலம்பட்டி – சின்னம் ஒதுக்குவதில் குளறுபடி. அமமுகவினர் தேர்தல் அதிகாரியை முற்றுகை
எழுதியவர்: mohan December 19, 2019, 8:36 pm




You must be logged in to post a comment.