17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “ஆனந்தம்” திட்டத்தில் ஆயுதப்படையில் ‘கிறிஸ்மஸ் பண்டிகை’ கொண்டாட்டம்

“ஆனந்தம்” திட்டத்தில் ஆயுதப்படையில் ‘கிறிஸ்மஸ் பண்டிகை’ கொண்டாட்டம்

எழுதியவர்: mohan December 19, 2019, 6:26 pm

மதுரை மாநகர காவல் ஆணையர்டேவிட்சன் தேவாசீர்வாதம்  ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் காவலர்கள் குடும்பத்தினருக்கு “ஆனந்தம்” திட்டத்தின் மூலமாக குழந்தைகளுக்காக “கிறிஸ்மஸ் பண்டிகை” கொண்டாட்டம் ஆயுதப்படை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்சிகளை காவல் ஆணையர் அவர்கள் துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் காவல் ஆணையர் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) .பாஸ்கரன் , அண்ணாநகர் (ச&ஒ) காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் மார்டின் (Nodal Officer Anandam), காவல் உதவி ஆணையர் (ஆயுதப்படை) .ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை).ராஜ்மோகன், Dr.கண்ணன் (Asst. Nodal Officer TN PWB), அமெரிக்கன் கல்லூரி முதல்வர் Dr.தவமணி கிறிஸ்டோபர், ரோகினி (PWB) மற்றும் 60 அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். இந்த கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் காவலர் குடும்பத்தில் இருந்து சுமார் 200 பேர் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!