மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக மற்றும் ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக வருவாய்
துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்து கொண்டு பேசினார். தமிழக முதல்வர் பழனிசாமி அரசின் சாதனைகளை மக்களிடம் வேட்பாளர்கள் எடுத்து சொல்லவேண்டும் எனவும், உள்ளாட்சி தேர்தலில் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும் எனவும் பேசினார். இதில் உசிலம்பட்டி சட்டமன்றத் உறுப்பினர் நீதிபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், பாண்டியம்மாள், நகர செயலாளர் பூமாராஜா, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்
எழுதியவர்: mohan December 19, 2019, 12:35 pm




You must be logged in to post a comment.