17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே கணவன் வீட்டாரை கண்டித்து கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டம்

தென்காசி அருகே கணவன் வீட்டாரை கண்டித்து கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டம்

எழுதியவர்: mohan December 19, 2019, 11:58 am

தென்காசி அருகே, வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்த கணவர் வீட்டாரைக் கண்டித்து இளம்பெண் ஒருவர், வீட்டின் முன்பாக கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கட்டேறிபட்டியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், அதே ஊரை சேர்ந்த தேன்மொழிக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்த நிலையில், அடுத்த 20 நாட்களிலேயே முருகன் வெளிநாடு சென்றுள்ளார். இதனிடையே, கடந்த நவம்பரில் தனது தாய் வீட்டில் தேன்மொழிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.ஆனால் கணவர் வீட்டாரோ, இக்குழந்தை தங்களது மகனுக்கு பிறக்கவில்லை என கூறி, தேன்மொழியையும் அவரது குழந்தையையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த தேன்மொழி வெளிநாட்டிலுள்ள தனது கணவரை டி.என்.ஏ சோதனை செய்ய அழைத்துவருமாறும் அவர் வரும் வரை, வீட்டுக்குள் தன்னை அனுமதிக்குமாறும் கூறி, கணவர் வீட்டின் முன்பாக கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!