18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு.

உசிலம்பட்டி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு.

எழுதியவர்: mohan December 19, 2019, 11:49 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை ரோட்டில் உள்ள எம்.பாறைப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது பசுமாட்டை வழக்கம் போல் தன்னுடைய தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கொண்டு சென்று செடியில் கட்டிவைத்துவிட்டி சென்றார்.அப்போது அந்த பசுமாடு தண்ணீருக்காக அலைந்து திரிந்த நிலையில் அருகில் உள்ள 70 அடி கிணற்றில் தவறிவிழுந்தது.

உடனே அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி தீயணைப்புத் துறை அதகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறை அதிகாரி தர்மலிங்கம் தலைமையிலான பணியாளர்கள் 70 அடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பல மணிநேர போராட்டத்திற்கு பின் நள்ளிரவில் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!