18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ஓய்வூதியர் தின விழா

இராமநாதபுரத்தில் ஓய்வூதியர் தின விழா

எழுதியவர்: mohan December 19, 2019, 10:44 am

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழா ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஜேம்ஸ் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பி. புஸ்பராஜ்   வரவேற்றார். திருக்குறளும் உடல் நலமும் என்ற தலைப்பில் ஆசிரியர் எம். உலகராஜ் பேசினார். அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய நலச்சங்க நிர்வாகி ஜே பவுல்ராஜ் , தமிழக மின்வாரிய ஊழியர் சங்க மாவட்ட தலைவர் த. ராமச்சந்திர பாபு வாழ்த்துரை பேசினார். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலர் குரு. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். எம். மணிக்கண்ணு நன்றி கூறினார். பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!