17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்னர் வீல் மிஷன் மம்தா விருது வழங்கும் விழா

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்னர் வீல் மிஷன் மம்தா விருது வழங்கும் விழா

எழுதியவர்: mohan December 19, 2019, 9:54 am

சர்வதேச மகளிர் அமைப்பான இன்னர் வீல் கிளப் (ராமநாதபுரம்) சார்பில் ஆதரவற்றோர் இல்லா இந்தியா உருவாக்குவோம் என்ற திட்டமான ‘மிஷன் மம்தா’ விருது வழங்கும் விழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சுமயா வரவேற்றார்.ராமநாதபுரம் இன்னர் வீல் சங்க தலைவர் கவிதா செந்தில்குமார் தலைமை வகித்தார்.மம்தா மிஷன் குறித்து இன்னர் வீல் சங்க நிர்வாகி டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் பேசினார்.மிஷன் மம்தா என்பது 190 நாடுகளில் , 72 ஆண்டுளாக இயங்கும் யுனிசெப் அமைப்பு அங்கீகரித்த திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் ஜெ.பாத்திமா கலிமாவின் சேவையை பாராட்டி இன்னர் வீல் கிளப் இன் உயரிய விருதான ‘மம்தா புரஸ்கார் ‘ விருது சக்கரக்கோட்டை அல் முமின் குழந்தைகள் காப்பக குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம் பாடங்கள் கற்பித்த தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி ஆங்கிலம், கணினி துறைக்கு பாராட்டு சான்றிதழ், சிறப்பிடம் பிடித்த மாணவிகள் எச்.மரியம் அபிரா , ஏ.பாத்திமா தஸ்லிம், ஏ.டி.பவுசியா பேகம், பி.ஜோஸ்பின் ஜெனிஷா, எஸ்.எஸ்.பாத்திமா பதீனாஆகியோருக்கு விருது, மற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை இராமநாதபுரம் இன்னர் வீல் சங்கத் தலைவர் கவிதா செந்தில் குமார் வழங்கினார்.சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஷேக் தாவூத் கான், இராமநாதபுரம் இன்னர் வீல் சங்கசங்க செயலாளர் கிருத்திகா ரகுநாத் ஆகியோர் வாழ்த்துரை பேசினர். கல்லூரி துணை முதல்வர் சுலைகா ஷகில், இராமநாதபுரம் இன்னர் வீல் சங்க நிர்வாகி கவிதா லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி ஏ.பர்ஹானா ஷப்ரீன் நன்றி கூறினார். மாணவிகள் எப். முகமது பாஜிலா பாத்திமா, இஜட்.எச்.கதீஜா ஹனீபா, எஸ்.ஐ. ஜெ.செய்யது பாத்திமா ஹாஜிதாஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!