17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே வலையபட்டி நரிக்குறவர் காலனியில் 6 அடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது.

உசிலம்பட்டி அருகே வலையபட்டி நரிக்குறவர் காலனியில் 6 அடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது.

எழுதியவர்: mohan December 18, 2019, 6:35 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள புதருக்குள் சலசலவென சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது புதருக்குள் பாம்பு இருப்பது தெரிய வந்தது.

உடனே அக்கம் பக்கத்தினர் உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறை அலுவலர் தர்மலிங்கம் தலைமையிலான பணியாளர்கள் அங்குள்ள 6அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!