17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே தோட்டத்திற்கு சென்றவரை கரடி தாக்கி படுகாயங்களுடன் மருத்துவமணையில் தீவிர சிகிச்சை.

உசிலம்பட்டி அருகே தோட்டத்திற்கு சென்றவரை கரடி தாக்கி படுகாயங்களுடன் மருத்துவமணையில் தீவிர சிகிச்சை.

எழுதியவர்: mohan December 18, 2019, 4:31 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துபாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பெரியகருப்பன் (22). இவர் ஊருக்கு அருகே மலைஅடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் பருத்தி சாகுபடி செய்த வந்த நிலையில் தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்வதற்காக தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த கரடி வேலைசெய்துகொண்டிருந்த பெரியகருப்பனை கடித்து குதறிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டது. உடனே அருகில் உள்ள தோட்டத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தவர்கள் பெரியகருப்பனை படுங்காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.முத்துபாண்டிபட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியதை தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிகளில் விரட்டியடித்தனர். அதனைதொடர்ந்து கரடிகளும் நடமாடதொடங்கியள்ளது.இது அக்கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!