18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில்பள்ளிக்குழந்தைகள் 5 பேர் காயம்.

உசிலம்பட்டி அருகே பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில்பள்ளிக்குழந்தைகள் 5 பேர் காயம்.

எழுதியவர்: mohan December 18, 2019, 12:27 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேம்பர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனம் பள்ளி குழந்தைகளை ஏற்றிகொண்டு குப்பணம்பட்டியிலிருந்து பள்ளி சென்று கொண்டிருந்தது.அப்போது மதுரையிலிருந்து தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பள்ளி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதனைத் தொடர்ந்து பேருந்தின் பின் வந்த மற்றொரு காரும் பேருந்து மீது மோதியது. இதில் பள்ளி குழந்தைகள் உட்பட 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்னர். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!