திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு தமிழ் பயிலரங்கம் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சீனிவாசகன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் பாண்டிச் செல்வி வரவேற்று பேசினார் . இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தின் காப்பிய ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஆலோசகருமான முனைவர் குமரன் கலந்து கொண்டு தமிழ்த்துறை சார்ந்த மாணவ ,மாணவிகளுக்கும், பேராசிரியருக்கும் தமிழ் துறையின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களான தமிழின் இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம், அதன் தொன்மை குறித்தான கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.இந்தநிகழ்ச்சியில் மதுரை செந்தமிழ் கல்லூரி, திண்டுக்கல் பார்வதி கல்லூரி, பெரியகுளம் திரவியம் கல்லூரி, வத்தலகுண்டு பண்ணைக்காடு வீரம்மாள் கலை கல்லூரி மற்றும் சூர்யா ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இருந்து 15-க்கு மேற்பட்ட தமிழ் துறை சார்ந்த கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பன்னாட்டு நிகழ்வு குறித்த கருத்தரங்கம்
எழுதியவர்: mohan December 18, 2019, 11:56 am




You must be logged in to post a comment.