18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆளும்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி கூட்டுறவு வங்கித்தலைவர் பதவியை மறைத்து ஒன்றித்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்.

ஆளும்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி கூட்டுறவு வங்கித்தலைவர் பதவியை மறைத்து ஒன்றித்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்.

எழுதியவர்: mohan December 17, 2019, 8:52 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னகாமன். இவரது மனைவி வசந்தா. இவர் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் உள்ள எம.;டி தனி103 தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன்சங்க அலுவலகத்தில் தலைவராக கடந்த 2வருடங்களாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12வது வார்டில் அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இவர் தான் பணிபுரியும் கூட்டுறவு வங்கித்தலைவர் பணியை மறைத்து விவசாய கூலிவேலை செய்துவருவதாக பிரமாணப்பத்திரம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளாhவேட்புமனு பரீசிலனையின் போது இவருக்கு எதிராக போட்டியிடும் நித்யா இது குறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி வசந்தா அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மனுவை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.ஆளும் கட்சியின் அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்திய வசந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேட்பாளர் நித்யா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து நித்யா மாவட்ட தேர்தல் அதிகாரிடம் புகார் செய்துள்ளார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!