17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை போது அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம், நீண்ட இழுபறிக்குப் பின் மனுக்கள் ஏற்பு.!

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை போது அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம், நீண்ட இழுபறிக்குப் பின் மனுக்கள் ஏற்பு.!

எழுதியவர்: Askar December 17, 2019, 7:24 pm

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை போது அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் நீண்ட இழுபறிக்குப் பின் மனுக்கள் ஏற்பு.!

தமிழகத்தில் ஊரக சாதாரண உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது . நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 12 பேரும், 20-ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 128 பேரும், 23 ஊராட்சி தலைவர் பதவிக்கு 140 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனுக்களின் பரிசீலனை இன்று நடைபெற்றது அப்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் ஊராட்சித்தலைவர் பதவிக்கு மொத்தம் 9- பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அமராவதி, லாவண்யா, சூர்யா, மஞ்சுளா ஆகிய 4 பேரும் ஏற்கனவே ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்ததாகக்கூறி நான்குபேர் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக கூறினர் இந்நிலையில் மனுதாரர்கள் 4 பேரும் தாங்கள் ஒன்றிய குழு உறுப்பினர் போட்டியிட வில்லை எனவும் அது அனைத்தும் தங்களது பெயரில் வேறு யாராவது போலியாக தாக்கல் செய்திருக்கலாம் .நாங்கள் தாக்கல் செய்யவில்லை அப்படி நாங்கள் தாக்கல் செய்து இருந்தாலும் அதற்கான வீடியோ ஆதாரங்களுடன் தங்கள் கையெழுத்தையும் காட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகளுக்கும் மனுதாரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்பு நீண்ட இழுபறிக்குப் பின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது . இதனால் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!