18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கை தப்ப முயன்ற அகதிகள் 6 பேர் கைது: ஆவணங்கள் பறிமுதல்

இலங்கை தப்ப முயன்ற அகதிகள் 6 பேர் கைது: ஆவணங்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan December 17, 2019, 5:18 pm

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் பகுதியில் கியூ பிரிவு போலீசார்  ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பெண்கள், ஒரு சிறுவன், 3 ஆண் களை பிடித்தனர். விசாரணையில்,திரிகோணமலை மூதூர் வெருகல் முகத்துவாரம் மகேஸ்வரன் மகன் உதயகுமார் 40, திரிகோணமலை மூதூர் 7ஆம் வட்டாரம் செல்ல பாக்கியம் மகன் சுதாகரன் 39, இவரது மனைவி சந்திரமதி 36, இவர்களது மகன் ஹரீஸ்கரன் 10,யாழ்ப்பாணம் வேலனை சண்முகலிங்கம் மகன் சதீஸன் 41,இவரது மனைவி டிலக்சனா 30 ஆகியோர் என தெரிந்தது. 2012 ல் அகதிகளாக தமிழகம் வந்து சென்னை, திருவள்ளூர் நகரங்களில் உள்ள முகாம்களில் இருந்தது தெரிந்தது. இவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த வங்கி கணக்கு புத்தகங்கள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், இலங்கை அரசின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!