17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரி மாணவிகளுக்கு காவல் ஆணையர் விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு காவல் ஆணையர் விழிப்புணர்வு

எழுதியவர்: mohan December 17, 2019, 5:12 pm

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  தல்லாகுளம் காவல் நிலையத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ள லேடிடோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள காவலன் SOS செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் மற்றும் இந்த செயலி மிகவும் முக்கியமானது எனவும் ஆபத்து காலங்களில் பெண்கள் இந்த SOS பட்டனை தொட்டால் போதும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு 5 நிமிடத்திற்குள் அருகில் உள்ள ரோந்து காவலர்கள் வந்து அவர்களை மீட்டுவிடுவார்கள். ஆகவே மாணவிகளாகிய நீங்களும் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்து பயனடையும்படி கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!