17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணத்திலிருந்து வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு புதிய மெமு ரயில் இயக்கம்

அரக்கோணத்திலிருந்து வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு புதிய மெமு ரயில் இயக்கம்

எழுதியவர்: mohan December 17, 2019, 4:22 pm

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து பேசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கூடுதல் நேரம் அந்த ரயில் எடுத்து கொண்டதால் ரயில் பயணிகளின் (வேலைக்கு செல்வோர், மாணவர்கள் ) கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் குஷன் சீட், கேமரா வசதியுடன் மெமு ரயிலை இயக்கியது. வேலூர் கன்டோன்மென்ட் பிலிருந்து காட்பாடி, திருவலம், வாலாஜாபேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும். இதன் காரணமாக 30 நிமிடத்திற்கு முன்பே அரக்கோணத்திற்கு சென்று விடலாம். வேலூரிலிருந்து அரக்கோணத்திற்கு ரூ 20-ல் பயணம் மேற்கொள்ளலாம் இதில் கழிவறை வசதியும் உண்டு. இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 8 கூண்டு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது மேலும் பயணிகள் முதல் பெட்டியிலிருந்து கடைசி பெட்டி உள்ளே சென்று வரலாம்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!