18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் குதித்த கீழக்கரை கல்லூரி மாணவர்கள்.:

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் குதித்த கீழக்கரை கல்லூரி மாணவர்கள்.:

எழுதியவர்: ஆசிரியர் December 17, 2019, 2:50 pm

குடியுரிமை சட்ட திருத்த மசோதோ (CITIZENSHIP AMEMNDMENT BILL) நிறைவேறியதை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.  இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி ஜாமியா மற்றும் உ.பி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி, மாணவர்களுக்கு உயிரிழப்ப வரை ஏற்பட்டது.  இதற்கு பல் வேறு கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் CAB குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரியும்  CAB க்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா மற்றும் உ.பி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அரச பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கல்லூரி மாணவர்கள் இன்று(17-12-2019) ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!