18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜித்தாவில் குடியுரிமை சட்டத்தை(CAB) எதிர்த்து நடந்த கண்டன கருத்தரங்கத்தில் மமக பங்கேற்பு..

ஜித்தாவில் குடியுரிமை சட்டத்தை(CAB) எதிர்த்து நடந்த கண்டன கருத்தரங்கத்தில் மமக பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் December 17, 2019, 12:19 pm

கடந்த 17-12-19 அன்று ஜித்தா இம்பாலா ஆடிட்டோரியத்தில் ஜித்தா கேரள பேரம் (JKF) சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஜித்தா நிர்வாகிகள் பொறியாளர். கீழை இர்பான், காரைக்கால் அப்துல் மஜீத், பரக்கத் அலி, ரிளுவான், செல்வகனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியாளர். கீழை இர்பான், இந்தியாவில் நடக்கும் அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும்,பாசிசம் இல்லா சுதந்திர இந்தியாவை உருவாக்க கேரளத்தில் இருந்து பொறி கிளம்பியுள்ளது என்று உரையாற்றினார்.

மேலும் பிரபல சமூக சேவகர் சிராஜ் அவர்கள் பேசுகையில் கட்சி இயக்க வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பன்னாட்டு திமுக நிர்வாகி காயல் செய்யத் மீரான், IFF மற்றும் தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் பயாஸ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் பாஸிச பிஜேபியைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!