18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.!

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.!

எழுதியவர்: Askar December 17, 2019, 10:37 am

 சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.! குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

டெல்லி, அசாம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களின் போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு, பொதுச்சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கை காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

வன்முறையால் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படாமலும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறத்தல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ள உள்துறை அமைச்சகம், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!