17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்த நாட்டின் பிள்ளைகளைப் புரிந்துகொள்ள போராடுகிறவர்களின் உடைகளை அல்ல, உள்ளங்களைப் பார்க்க வேண்டும் பிரதமர் அவர்களே.

இந்த நாட்டின் பிள்ளைகளைப் புரிந்துகொள்ள போராடுகிறவர்களின் உடைகளை அல்ல, உள்ளங்களைப் பார்க்க வேண்டும் பிரதமர் அவர்களே.

எழுதியவர்: Askar December 17, 2019, 10:20 am

குடியுரிமை மறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுகிறவர்கள் அந்த மூன்று நாடுகளின் முஸ்லிம்களோ, இந்தியாவின் முஸ்லிம்களோ மட்டுமல்ல. சட்டத்தின் அநீதியைப் புரிந்துகொண்ட இந்துக்கள், மற்ற அனைத்து மதத்தினர், மதமற்றோர் எல்லோருமே போராடுகிறார்கள். தங்களுடைய குடியுரிமைக் கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன் என்று கேட்டுப் போராடுகிறவர்கள் இலங்கையிலிருந்து வந்த தமிழ் மக்களும், இங்குள்ள தமிழ் மக்களும் மட்டுமல்ல. கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்ட எல்லோருமே போராடுகிறார்கள். மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதால் தங்களின் அடையாளம் அழியும் என்ற அச்சத்தோடு வட கிழக்கு மாநிலங்களில் போராடுகிறவர்கள் பழங்குடியினர் மட்டுமல்ல. அச்சத்தின் அடிப்படையை புரிந்துகொண்ட இந்து, முஸ்லிம் எல்லோருமே போராடுகிறார்கள்.. இந்த நாட்டின் பிள்ளைகளைப் புரிந்துகொள்ள போராடுகிறவர்களின் உடைகளை அல்ல, உள்ளங்களைப் பார்க்க வேண்டும் பிரதமர் அவர்களே.

அ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!