மதுரை பைபாஸ் சாலை காளவாசலில் 108 வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வாகனமானது தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டு விடுமுறை நாட்களில் மட்டும் காளவாசல் பகுதியில் நிறுத்தப்படுகிறது மற்றும் இரவு நேரங்களில் நிறுத்தப்படுகிறது. பைபாஸ் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் மேலும் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் காரணத்தினால் இங்கு 108 வாகனம் இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது 108க்கு தகவல் கொடுத்தால் பெரியார் பேருந்து நிலையத்தில் ஒரு வாகனம் உள்ளது அது வேறு கேசுக்கு சென்றுவிட்டாள் அச்சம்பத்து இஎஸ்ஐ மருத்துவமனை அல்லது திருப்பரங்குன்றம் அல்லது திருமங்கலத்திலிருந்து தான் வாகனம் வர வேண்டிய நிலை உள்ளது இதனால் காயம் பட்டவர்கள் உயிரிழக்கவும் நேர்கிறது விரைவாக காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு கொண்டு செல்ல காளவாசல் பகுதியில் உடனடியாக ஒரு 108 வாகனத்தை நிறுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை காளவாசலில் இருந்து 108 வாகனம் மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
எழுதியவர்: mohan December 17, 2019, 10:24 am




You must be logged in to post a comment.