18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் அலையாத்தி காடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் அலையாத்தி காடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan December 17, 2019, 9:36 am

இராமநாதபுரம் வன உயிரின சரகம் சார்பில் அலையாத்தி காடுகளை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் து.கோ.அசோக்குமார் அறிவுறுத்தல் படி, அலையாத்தி காடுகள் பாதுகாப்பு மற்றும் அவசியம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல் புற்கள், கடற்குதிரை, கடல் அட்டை வேட்டையாடுவதால் கடல் வளம் பாதிப்பு குறித்து தேவிபட்டினம், முத்து ரெகுநாதபுரம், எஸ்.பி.பட்டினம், தொண்டி ஆகிய கடலோர பகுதி மக்களிடம்நெல்லை அரும்புகள் அறக்கட்டளை கலைக்குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. வனச்சரக அலுவலர் சு.சதீஷ்,வனவர் சந்துருராஜா,அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் லதா, இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி முனைவர்கள் , வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!