17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சுரபி அறக்கட்டளையின் நிறுவனர்,ஹேமா முரளிதரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம்.!

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சுரபி அறக்கட்டளையின் நிறுவனர்,ஹேமா முரளிதரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம்.!

எழுதியவர்: Askar December 16, 2019, 10:56 pm

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சுரபி அறக்கட்டளையின் நிறுவனர்,ஹேமா முரளிதரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம்.!

திருமதி லதா ரஜினிகாந்த்  தலைமையேற்று நடத்தி வரும் ஸ்ரீதயா ஃபௌண்டேஷனின் அங்கமான PEACE FOR CHILDREN என்ற குழந்தைகள் நல அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட மையத்தில், இன்று (16/12/2019) சுரபி அறக்கட்டளையின் சார்பாக நடிகரும் சமூக ஆர்வலருமான ரஜினிகாந்த் அவர்களின், பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 1098 எண் பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. குழந்தைகள் நலனுக்கான அரசின் இலவச தமிழ் மொழி வழி அவசரகால உதவி எண்ணான 1098 க்கு, ஆபத்து காலத்தில் அழைத்து உதவி கோர வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான எந்த பிரச்சனை எனினும் தயங்காது அழைக்க வேண்டும் என்று குழந்தைகளிடமும் பெற்றோர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட PEACE FOR CHILDREN செயலாளரும் கவிஞருமான ஹேமா முரளிதரன் (கவிதாயினி. செந்தாமரைக்கொடி) ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் NATIONAL INSURANCE COMPANY வட்டார முதுநிலை மேலாளர் திரு. நாகராஜன் தலைமையேற்று கல்வி ஒன்றே பல அறியாமைகளில் இருந்து நம்மைக் காக்கும் என்பதையும், முயன்றால் ஒவ்வொருவரும் நாளைய தலைவர்கள் தாம் என்றும் பேசினார்.

PEACE FOR CHILDREN தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் திருமதி. ரங்கநாயகி மற்றும் மாணவ மாணவிகள், பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!