18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தேர்தல் பணிகள் குறித்து கோட்டாட்சியர் ஆய்வு

உசிலம்பட்டியில் தேர்தல் பணிகள் குறித்து கோட்டாட்சியர் ஆய்வு

எழுதியவர்: mohan December 16, 2019, 7:36 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு போட்டியிட பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சையாக பெண்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏராளமான வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் உசிலம்பட்டி தேர்தல் நடத்தும் உயர் அதிகாரியான கோட்டாட்சியர் சௌந்தர்யா உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் வேட்புமனு பெறப்பட்டது உட்பட பல்வேறு தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!