17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆரம்பித்தது உள்குத்து.ஒரே கட்சியில் ஒரே பதவிக்கு இருவா் மனுத்தாக்கல்

ஆரம்பித்தது உள்குத்து.ஒரே கட்சியில் ஒரே பதவிக்கு இருவா் மனுத்தாக்கல்

எழுதியவர்: mohan December 16, 2019, 7:03 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 12வது வார்டுக்கு மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக நேற்று முன்தினம் சுதாகரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிமுக வேட்பாளர் சுதாகரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.இந்நிலையில் அதே 12வது வார்டு மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆண்டிபட்டியின் முன்னாள் எம்.எல்.ஏ. தவசியின் மனைவி மஞ்சுளா என்பவரும் அதிமுக சார்பில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய முன்னாள் எம்.எல்.ஏ. தவசி தனது மனைவியுடன் வந்த போது சுதாகரனின் தந்தை மாணிக்கம் என்பவர் வழி மறித்தது வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஒரே பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த இருவர் வேட்புமனு தாக்கல் செய்ததும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!