17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேட்பாளர்களுக்கு அருளாசி வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

வேட்பாளர்களுக்கு அருளாசி வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

எழுதியவர்: mohan December 16, 2019, 6:08 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மேக்கிழார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. அங்கு அங்கு வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் அலுவலகம் முன்பு நின்று வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நெற்றியில் திருநீறும் பூசி விட்டார். கட்சி பாகுபாடின்றி சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட அனைவரும் இவரது காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றனர். தேர்தல் பரபரப்பு நேரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்பு அருளாசி வழங்கியதை அனைவரும் ஆச்சிரியத்துடன் பார்த்து சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!